This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Monday, May 31, 2010
Friday, May 28, 2010
Thursday, May 27, 2010
Monday, May 17, 2010
நிஐமான காதல்
நட்பு என்பது...!
நண்பன்
உன்னருகில் நான் வரவே...
பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாகபிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடைகொந்தளித்துக் கொண்டிருக்கும் இனியும் பிரிந்திருந்தால்...நாமிருந்த இணையத்தில் குறைந்தபட்சம் சிரித்திருந்தோம்,நம்மின் சந்தேகத்தினிடையே..., நலமுடன் நாம் தெரிந்திருந்தோம்,நம்மின் கனிவுமிகு காதலினை..., அதனால் நம் பயமெல்லாம்மாயமாய் மறைந்ததை நாம் அறிந்துமிருந்தோம்.ஆனால் இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்.அதனால் சில சமயம் எழும் சந்தேகங்களைஇயற்கை என எண்ணிக்கொள்(ல்)வோம்.இமைப்பொழுதில் உனை நினைக்கையில்என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...உன் புன்னகையின் மெல்லினத்தை,உன் அன்புநிறை சாரீரத்தை,எனைச்சுற்றி நீ வளைத்த உன் இதமான வளை கரத்தை...உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை வலிமையதுஎன்பதனை உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த து}ரமும்என்னை தொந்தரவு செய்கிறது...நீ கொண்டுள்ள பயத்தை, பாரத்தை நிரந்தரமாய் நீக்கிடவும்,உன் கண்ணெதிரே தோண்றி - நிலைத்திருக்கும்என் அன்பை உன்னிடத்தில் கொடுத்திடவும்... எனக்கு நீ எத்துனை உகந்தவள் என்பதனை இதமாய் எடுத்துரைத்திடவும் என் ஏக்கமெல்லாம் உன்னருகில் நான் வரவே...இனியவன்...
Friday, May 14, 2010
வாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் !!!
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.
* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்.
* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டோளியுங்கள்.
* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படதிர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதிர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதிர்கள்.
* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.
* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்தையும் சொல்ல மறவதிர்கள்.
Thursday, May 13, 2010
கடவுள் உண்டா, இல்லையா?
நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.
உரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது " ஞான வரம்பு" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவதன்று. இதுபற்றியே மேலோர் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்பர். நமது காரைக்காலம்மையாரும் திருமூலநாயனாரும் முறையே.
அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேனின்றுந் திருவுருவங் காண்கிலே - னென்றுந்தானெவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேனெவ்வுருவோ நின்னுருவ மேது எனவும்,
உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள்கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப்புரையற் றிருந்தான் புரிசடையோனே.
எனவும் அருளிச் செய்தார்கள்.
ஒருவன் மரணாவஸ்தைப்படும்போது அவனுடைய சுற்றத்தார்கள் அவனைநோக்கி "அப்பா, நீபடும் வேதனையை நாங்கள் அறியச் சொல்" என்று கேட்டால் அவன் "ஐயோ, நான்படும் வேதனையை உங்களுக்கு எவ்வாறு தெரிவிப்பேன்" என்றான். இப்படியே ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை யொருவர் மருவி அனுபவிக்குங் கலவி யின்பத்தைப் பிறர்க்குச் சொல்ல இயல்வதில்லை. இச்சிற்றன்பமும் அனுபவமாத்திரமாயிருப்பது மாத்திரமின்றி, அதற்குரிய பருவம் வந்தபிறகே அனுபவத்திற்கு வருகிறது. இதனை "கன்னிகை யொருத்தி சிற்றின்பம் வேம்பெனினுங் கைக்கொள்வள் பக்குவத்தில், கணவனருள் பெறின் முனே சொன்னவா றென்னெனக் கருதி நகையாவள்" என்னுந் தாயுமானசுவாமிகள் திருவாக்கும் உணர்த்தும். அதுபோல் பேரின்பமயமாயிருக்கும் கடவுளை மலபரிபாகம் பெற்ற ஞானிகளும் இரண்டறக்கூடி இன்ப மார்ந்திருப்பரேயன்றி பிறர்க்கெடுத்துரையார். ஆதலால், நாமும் நாத்திகர் கேட்கும் கேள்விக்கு விடை வாயினாற் சொல்லப்படுவதன்று என்பதைக் குறிப்பாய் உணர்த்தவேண்டி மெளனமாயிருந்து விடுவோம்.
இனி "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை "அன்பினில் விளைந்தவாரமுதே" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.
அன்றியும் "குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.
தமிழ்வேதம்
எந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்கந்தமாமலருந்திக்கடும் புன னின்வாமல்குகரைமேலந்தண்சோலை நெல்வாயி லரத்துறையடிகடம்மருளே.
வைத்தநிதியேமணியே யென்றுவருந்தித்தஞ்சிந்தைநைந்துசிவனே யென்பார்சிந்தையார்கொத்தார்சந்துங்குரவும் வாரிக்கொணர்ந்துந்திமுத்தாறுடையமுதல்வர்கோயின்முதுகுன்றே.
உலகத்தில் கடவுள் உண்டு என்று நம்பி அவரை வழிபடுவோருள்ளும் தம்முடைய அன்பெல்லாம் மனைவி மக்களிடத்திலும் செல்வ முதலியவற்றிலுமே அழுந்தவைத்திருப்பவர்களுக்கும் கடவுள் இலராகவேயிருக்கின்றார். இவ்வாறு சிற்றின்பப் பிரியராய் பிரபஞ்ச வாழ்க்கையையே பெரிதாக மதித்துக் கடவுளையும் அவராலுண்டாகும் பேரின்பத்தையும் இழப்பார்க்கு இரங்கியே நமது மாணிக்க வாசகசுவாமிகள்.
தினைத் தனையுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதேநினைத் தொறுங்காண்டொறும் பேசுந்தொறுமெப்போதும்அனைத் தெலும்புண்ணெக வானந்தத்தேன்சொரியும்குனிப்புடையானுக்கே சென்றூதாய்கோத்தும்பீ.
என்றருளிச்செய்தனர்.
கடவுளை அவரருளையே கண்ணாகக் கொண்டு காணவேண்டுமே யன்றி ஆணவமலத்தால் மழுங்கிக் கிடக்கும் சுட்டுணர்வைக் கொண்டு காணலாகாது.
அருளைக் கண்ணாகக் கொண்டு காணும் ஞானிகளுக்குப் பேரொளியாகிய பரசிவம் தோன்றும்; பிரபஞ்சந் தோன்றாது. சுட்டி யறியும் அறிவைக் கொண்டு காணும் ஏனையோர்க்கு அந்தகாரமாகிய பிரபஞ்சந்தோன்றும்; சிவம் தோன்றாது.
தாயுமானசுவாமிகள் பாடல்
"அருளாலெவையும் பாரென்றான் - அத்தை, யறியாதே சுட்டி யென் அறிவாலே பார்த்தேன் - இருளான பொருள் கண்ட தல்லால் - கண்ட வென்னையுங் கண்டில னென்னேடி தோழி - சங்கர சங்கர சம்பு."
திருத்தாண்டகம்
"மைப்படிந்த கண்ணாளுந்தானுங் கச்சிமயானந்தான் வார்சடையானென்னினல்லா. னொப்புடையனல்ல னொருவனல்ல னோரூரனல்ல னோருவமனில்லி, யப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லா, லிப்படிய னிந்நிறந்த னிவ்வண்ணத்த னிவனிறைவ னென் றெழுதிக் காட்டொணாதே."
இவ்வாறு, சுத்தாத்வைத சித்தாந்த சைவநெறியைக் கடைப் பிடித்துச் சரியை கிரியா மார்க்கங்களிலிருந்து தம்மை வழிபடுவார்க்குச் சிவபெருமான் படர்க்கையாகவும், சிவயோகிகளுக்கு முன்னிலையாகவும், சிவஞானிகளுக்குத் தன்மையாகவும் இருந்து, அருள்செய்வதனாலும், அவரை வழிபடாதவர்க்கு அவர் அவ்வாறிருந்து அருள் செய்தலில்ல்லாமையாலும், நாம்" கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பது.
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகியூனாகி யுயிராகி உண்மையுமா யின்மையுமாய்கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே.
கிருஷ்ண ஜெயந்தி
சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.
அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது பகவானுக்கு கொடுத்தால் , அவரின் வலி தீர்ந்து விடும் என்றார்.
உடனே கிருஷ்ணர் , ருக்மணியிடம் , உன் பாதங்களை கழுவி அந்த நீரை உடனே கொடு , என்னால் வலி பொறுக்க முடியவில்லை என்று கெஞ்சினார்.
திடுக்கிட்டு போன ருக்மணி சொன்னாள், நீங்களோ உலகை எல்லாம் காக்கும் கடவுள் , உங்களுக்கு என் பாதம் பட்ட நீரை அளித்தால், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும் ! இப்படி ஒரு பாவ செயலை செய்ய நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்.
கிருஷ்ணர் , நாரதரை அழைத்து , நீங்கள் பிருந்தாவனத்துக்கு சென்று யாரிடமாவது , என் நிலைமையை எடுத்து கூறி , உடனே அவர்களின் பாதம் கழுவிய நீரை பெற்று வாருங்கள் , என்று அனுப்பி வைத்தார்.
சிறிது நேரத்திலேயே நாரதர் ஒரு கிண்ணத்தில் நீருடன் வந்தார் . கிருஷ்ணர் அந்த நீரை சிறிது பருகிய உடனேயே அவரின் , வயிற்று வலி சட்டென குணமாகி விட்டது. பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.
ருக்மணி நாரதரிடம் ஆவலாய் , யார் சுவாமி , பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ? என்று கேட்டாள் . நாரதர் சொன்னார் , நான் போய் பிருந்தாவனம் முழுதும் சுற்றி பகவானின் நிலைமையை எடுத்து கூறி கேட்டும் யாரும் கொடுக்க தயாராக இல்லை ! அப்போது ஒரு சிறுமி வந்து தன் பாதங்கள் கழுவிய நீரை கொடுக்க ஓடி வந்தாள். அவளது தோழியர் அவளிடம் , ராதை ! நீ பெரும் பாவத்தை செய்ய போகிறாய் ! பகவானுக்கு உன் பாதம் பட்ட நீரை கொடுத்தால் நீ ஏழு ஜென்மத்திற்கும் நரகத்தில் தள்ள படுவாய் ! என்று தடுத்தனர்., ஆனால் அதற்கெல்லாம் கவலை படாத ராதை கூறினாள், " எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ! ஆனால் என் பகவான் கிருஷ்ணர் , வலியில் அவதி படுவதை என்னால் தாங்க முடியாது " என்று கூறி , அவள் தான் கொடுத்தாள், என்றார்.
ருக்மணி பக்கம் திரும்பிய கிருஷ்ணர் ," பார்த்தாயா ருக்மணி , எனக்காக ராதை நரகத்திற்கு கூட செல்ல தயாராகி விட்டாள் ! அவள் என்னை பற்றி மட்டுமே கவலை பட்டாள் . தனக்கு என்ன நேர்ந்து விடுமோ என தன்னை பற்றி எள்ளளவும் கவலை படவில்லை " இதுவன்றோ உண்மையான அன்பு , எந்த நிபந்தனைகளும் அற்றது ! தியாக உணர்வு கொண்டது !! இதுவே தலை சிறந்த பக்தி , ராதையே தலை சிறந்த பக்தை என்றார், தலை குனிந்து ருக்மணி ஒப்பு கொண்டாள்.
டிஸ்கி : நமக்கு என்ன நடக்கும் என நினைத்து செய்யப்படும் எந்த செயலும் அன்பின் பாற்பட்டது ஆகாது ! ஆகவே எதிர் பார்ப்பில்லாத அன்பினை உலகிற்கு அளிப்போம் ! !!