Thursday, May 27, 2010

நட்பு..!


சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..

சிலுவை கிடைத்தாலும்
சுமப்பதுதான்.நட்பு.

Monday, May 17, 2010

உண்மையான தோல்வி

தோல்வியில் இருந்து எதையும் கற்று
கொள்ளவில்லை என்றால்,
அது தான்
உண்மையான தோல்வி!

என் எதிரி என் கண் இமை


என்னக்கு யாரும் எதிரிகள் இல்லை

உன்னை பார்க்கும் போதும் மறைக்கும்

என் கண் இமையை தவிர!!!...

நிஐமான காதல்


காதலிக்கத் தெரிந்த

உனக்கு காதலைச் சொல்ல துணிவில்லை..................

கண்களால் பார்க்கத் தெரிந்த

உனக்கு பேசுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை.......................

மனதைக் கலைக்கத் தெரிந்த

உனக்கு என் மனதின் விருப்பத்தை அறிய முடியவில்லை...........

அதனால் தான் கேட்கின்றேன் நீ என்னைக் காதலித்தது நிஐம் தானா???

நிஐமென நம்பி வாழ்ந்த நான் இன்று உன் நிழலைத் தேடி அலைகிறேன்...........

ஏனெனில் நான் உன் மேல் கொண்டது நிஐமான காதல்!!!!

நட்பு என்பது...!



காதல் எனும் தலைப்பில் எழுத சொல்லியிருந்தால்... உடனே எழுதியிருப்பேன், கல்லறையென்று! நட்பெனும் தலைப்பிலல்லவா எழுத சொல்லிவிட்டாய்... எழுதால் எழுதக்கூடியதா நட்பு? இதயதுடிப்பல்லவா அது... துடிப்பை உணரதான் முடியும்...

நண்பன்

அன்று எனக்கு உயிர் தந்தது என் பெற்றோர்கள்...... இன்று எனக்கு உயிராக இருப்பது என் நண்பர்கள்.... என்றும் என் பெற்றோர்களுக்கு இணையாக இருப்பவர்கள் என் நண்பர்கள்..... நண்பர்கள் இல்லாமல் இப்பூவுலகில் எவரும் இல்லை..... இப்படிபட்ட நட்புக்கு என் முதல் வணக்கம்....

உன்னருகில் நான் வரவே...

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாகபிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடைகொந்தளித்துக் கொண்டிருக்கும் இனியும் பிரிந்திருந்தால்...நாமிருந்த இணையத்தில் குறைந்தபட்சம் சிரித்திருந்தோம்,நம்மின் சந்தேகத்தினிடையே..., நலமுடன் நாம் தெரிந்திருந்தோம்,நம்மின் கனிவுமிகு காதலினை..., அதனால் நம் பயமெல்லாம்மாயமாய் மறைந்ததை நாம் அறிந்துமிருந்தோம்.ஆனால் இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்.அதனால் சில சமயம் எழும் சந்தேகங்களைஇயற்கை என எண்ணிக்கொள்(ல்)வோம்.இமைப்பொழுதில் உனை நினைக்கையில்என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...உன் புன்னகையின் மெல்லினத்தை,உன் அன்புநிறை சாரீரத்தை,எனைச்சுற்றி நீ வளைத்த உன் இதமான வளை கரத்தை...உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை வலிமையதுஎன்பதனை உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த து}ரமும்என்னை தொந்தரவு செய்கிறது...நீ கொண்டுள்ள பயத்தை, பாரத்தை நிரந்தரமாய் நீக்கிடவும்,உன் கண்ணெதிரே தோண்றி - நிலைத்திருக்கும்என் அன்பை உன்னிடத்தில் கொடுத்திடவும்... எனக்கு நீ எத்துனை உகந்தவள் என்பதனை இதமாய் எடுத்துரைத்திடவும் என் ஏக்கமெல்லாம் உன்னருகில் நான் வரவே...இனியவன்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons