Thursday, June 10, 2010

நட்பின் ஆழம்


Wednesday, June 9, 2010

இந்தியனின் கவலை

ஐ பி எல் விளையாட்டும் முடிந்ததது
மோடியும் நிறுத்தியாகிவிட்டது

சுப்பர் கிங் கோப்பையும் வாங்கிவிட்டது

நாளைய இந்தியாவுக்கு
அடுத்த கவலை
உலக கோப்பை இருப்பது இருப்பது


இந்திய கோப்பை வாங்குமா ?
இவைகள் எல்லாம் கவிதை என்னும் வரிசையில் சேருமா என்று தெரியாது ஏதோ எழுதுகிறேன் என்று சொல்வதை விட என் எழுத்து பாணியை நான் புதுபிகிறேன் என்று சொல்வது சிறந்தது பத்து நிமிட எழுத்து உங்கள் எண்ணத்தில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதுதான் என் எழுத்தின் உண்மையான வெற்றி என்பேன்

ரொட்டி துண்டின் மதிப்பு


பத்து ருபாய் நோட்டு புக்குக்கு
பத்தாயிரம் செலவு செய்து விளம்பரம் செய்பவனை
படம் பிடிக்கும் கேமராவுக்கு தெரியாது
ரோட்டோர நாய்க்கு ரொட்டி துண்டை போட்ட பிச்சைக்காரன் பெருந்தன்மை ..

கவிதை மாதிரி ?

அழகிய விழிகள் பார்க்கும் பார்வை !
செவ்விதழ் உதடுகள் பேசும் பேச்சு !
ஆப்பிள் போன்ற முகம்
வெண்ணிற மேனி பளிங்கு போன்ற முகம்கண்ணே உன் புற அழகை கண்டு மையல் கொண்டேன்
அக அழகை காணும் வாய்ப்பில்லா குருடனாய்? நேற்று என்ற முடிந்த கனவில் !
இன்று என்னும் நிஜத்தை கொன்று !
நாளைய சமாதிக்கு அடித்தளம் போடும்
முடிந்து போனவைகள் பற்றிய- நினைவுகள்


திருமணமான புதியதில் முதல் சம்பளத்தில்
மனைவிக்கு நகை வாங்கும் போது
நினைவுக்கு வந்து கொன்றது
முதல் சம்பளத்தில் அம்மாவுக்கு வாங்காத சேலை?



எப்படி உங்களுக்கு கவிதை(இது கவிதையா?) பிடித்து இருந்தால்
மறக்காமல் பின்னுட்டம் இடவும்
குறை இருந்தால் கூறவும் திருத்தி கொள்கிறேன்

இப்படிக்கு
உங்கள் நண்பன்
A.Raj Kumar

Monday, June 7, 2010

இனிமையான ஓர் பயணம்

Yesterday is a Old paper
Today is a News paper
Tomorrow is a Test paper
Life is a Answer paper

So.. ...DON'T WAST A DAY's

Friday, June 4, 2010

இன்று ஒரு கடிதம்.....


ன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.



காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன்.


எத்தனையோ கண்டுவிட்டேன்....


பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே.


அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும் அக்காமாறும், அவர்களை பார்த்து கண்ணீர் விடும் எண்ணில்லா மனங்களும், காட்சிகளாய் என் முன்னே வந்து நிற்க.... ஒரு கடிதம் எழுதுகிறேன்.


பாடசாலையிலே சின்னஞ்சிறுவர் நாம் சொந்த உழைப்பினிலே பங்கர் கிண்டியதும், ஓடியாடி விளையாடியதையும் விட சுப்பர்சோனிக்குக்கு பயந்தோடி பங்கருக்குள் பதுங்கியது, பங்கருக்குள் இருந்த பாம்பு கடித்து நன்பன் இறந்ததுவும் நினைவுகளாய் அலைமோத... இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எழுத்துக்கள் முற்றுப் புள்ளியுடன் மோதியும், ஆச்சரிய குறியிடம் அடிபட்டும், கேள்விக்குறியிடம் சிக்குண்டும், எதுகை மோனை போல் சலசலத்தும் வரைகிறது காகித்தில்... "வேண்டாம்" என்று.


நவாலி வெளியிலே அடுக்கடுக்காய் அந்த சகடை போட்ட எட்டும் காற்றில் பறந்து வந்த காட்சிகளும், நெஞ்சுநோவு என்று வழியிலேயே குந்தி இருந்து எம்மை தேவாலத்தை அடையவிடாத காப்பாற்றிய அந்த பெருசும் காட்சிகளாய் வர.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


அப்பாவும் ,அம்மாவும், அக்காவும் , அண்ணாவும், சுற்றமும் அகதியாய் அன்று ஓடியதன் கால் வலி இன்று உணர்ந்திட.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


நெட்டைக்கால் தாத்தாவுக்கு கட்டைக்கால் பொருத்தியதும், கம்பீரமாய் நின்றவர் கூனிகுறுகியதும் நினைவுகளாய் மனதில் விழ... எழுதுகிறேன் ஒரு கடிதம்.


வேந்தன் மாமா வேங்கையாய் ஆகியதும் வெம்பி வெம்பி நாம் அழுததுவும்
பயந்தொடிய அக்காலங்களும் போராட சென்றவர்கட்டு சுட்டனுப்பிய பருத்தித்துறை வடையும் ஞாபகங்களாய் இரைமீட்க... எழுதுகிறேன் ஒரு கடிதம்.



தாத்தா மென்று துப்பிய வெற்றிலை சிவப்பு கறை கண்டு அலரித்துடித்த அப்பத்தா- பிரிதொரு நாளில், அப்பாவியாய் குருதிகளுக்கு நடுவில் உறங்கிய காட்சிகளும் நினைவில் வர.... எழுதுகின்றேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"



அக் கொடுமைகளை நித்தம் நான் கண்டுகொண்டிருந்தால் எனக்கும் ஒருவித வெறி வந்திருக்கும்... ஆனால் பாதியிலே இங்கு வந்ததால் பயம்தான் வந்ததுவோ? தெரியவில்லை..


ஆதலினால் பயத்துடன் எழுதுகிறேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"








மதிப்புக்குறியவர்களுக்கு,
என்னை ஜெர்மன் ராணுவ சேவைக்கு அழைத்த அழைப்புக் கண்டேன்.
என்னுடைய நாட்டில் ஏற்பட்ட போர் சூழல்களால் நானும் என்னுடைய பெற்றோர்களும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உடலளவில் நான் ஜெர்மன் நாட்டு படையில் சேர தகுதி பெற்றிருந்தாலும் மனதளவில் நான் தயாரில்லை. எனினும் எனக்கு தெரியும். கட்டாய சேவை செய்தே ஆகவேண்டும் என்று. ஆகவே எனக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ராணுவ சேவையை சமூகசேவையாக மாற்றிதருமாறு வேண்டுகிறேன்.

வேண்டுதலுடன்
ஜீவன்.

வேலை நிட்சயம்


வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம்
உழைத்து உண்பதே
வரும்கால லட்சியம் .


வேலை கொடுத்தல்
தந்தவர் மாணம்-நிலைக்கும்
தர அவர் மறுத்தால்
பாவம் அவரை கலைக்கும் .


அதோ வாணம்
பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
குறுகிக் கிடக்கு .


'வேலை நிட்சயம்'


வேலை ஒன்று கிடைக்காமல்
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.

வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன் தேடுவேன்
கிடைக்கும் வரை ஓயாது.

ஒவ்வொரு மாதமும்
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.

"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"

"வேலை நிட்சயம்

ஒருவனது திண்டாட்டம்
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும்
என்று வரும் என்னாட்டம்.

சொத்து சுகம் இல்லாமல்
வாழ்வில் என்ன சந்தோசம்
காரிலே செல்வதில்
இருக்கும் ஒரு உட்சாகம்

குடும்பமும் பிள்ளையும்
எனது சந்தோசமே
வேலை தேடுவது
எனது போராட்டமே.

என்றோ ஒருநாள் வேலை
கிடைத்திடுமே........................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons